வாட்டர் லெவல் கண்ட்ரோலர் உங்கள் பம்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. இந்த சாதனங்களின் கண்டுபிடிப்புகள் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நீர் பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றன. இந்த சாதனங்கள் வீடுகள், கம்பனிகள் மற்றும் விவசாயத் துறையில் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையில் சாகுபடியின் போது நீர் பிரச்சினைகள் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றன.

பல முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் செமி-ஆட்டோமாடிக் மற்றும் முழு தானியங்கி வாட்டர் லெவல் கண்ட்ரோலர்கள் கிடைக்கிறது.
தானியங்கி வாட்டர் லெவல் கண்ட்ரோலர் மோட்டரின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை மற்றும் மின்சார செலவை குறைக்க உதவுகின்றன. இதன்மூலம் தண்ணீர் மற்றும் ‌மின்சாரம் வீணாவது கணிசமாகக் குறைக்கப்படுகிறது. இது மோட்டாரை ட்ரை ரன் ஆகாமல் பாதுகாக்கிறது. இதனால் மோட்டாரின் ஆயுள் அதிகரிக்கிறது.

மேல்நிலை தொட்டி காலியாகும்போது மோட்டார் இயக்கப்படுகிறது மற்றும் நிலத்தடி தொட்டி காலியாகும் போது அல்லது மேல்நிலை தொட்டி நிரம்பும்போது தானாகவே அணைக்கப்படும்.
இதனால் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் 24 மணிநேர நீர் விநியோகத்தை உறுதி செய்வது எளிது.

இதில் பயன்படுத்தும் சென்சார்கள் பிளாஸ்டிக்கில் வடிவமைக்கப்பட்துள்ளதால் பாதுகாப்பானவை மற்றும் அரிக்காது. எனவே நீண்ட காலம் நீடிக்கும்.

இந்த சாதனங்களின் புகழ் மற்றும் பயன்பாடு உயர்ந்துள்ளது. ஏனெனில், இதனால் தண்ணீர் சேமிக்கப் படுகிறது, மின்சார செலவு குறைகிறது, நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் மோட்டாரை ட்ரை ரன் ஆகாமல் பாதுகாக்கிறது.

Fully Automatic Water Level Controller Kjmindia

நீர் மேல் மட்டத்தை அடையும் போது மோட்டாரை நிறுத்துகிறது.

மேல்நிலை தொட்டியில் நீர் ஓட்டம் இல்லாதபோதும் மோட்டாரை நிறுத்துகிறது

நீர் மட்டம் கீழ் மட்டத்திற்கு கீழே இறங்கும் போது மோட்டாரை இயக்குகிறது

பாதுகாப்பான காந்த மிதவை சுவிட்சுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

நீரில் மின்னோட்டம் செல்லாது மற்றும் தண்ணீருக்குள் ரசாயன எதிர்வினை இல்லை

மானுவல் மற்றும் ஆட்டோ ஸ்விட்ச் வசதி உள்ளது.